அதிவேக நெடுஞ்சாலையை முறைகேடாக பயன்படுத்திய அதிகாரவர்க்கம்
கடந்த அரசாங்கங்களின் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையை "S Pass" சிறப்பு அனுமதிப்பத்திரம் மற்றும் உயர்மட்ட தொலைபேசி அழைப்புகள் மூலம் தவறாக பயன்படுத்தியதாகவும் தற்போது அந்த நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக பணம் செலுத்தாமல் நாள் ஒன்றுக்கு 150-200 வாகனங்கள் சென்றதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.
யார் பயணம் செய்யலாம்
அதிவேக நெடுஞ்சாலையில் ஜனாதிபதி, பிரதமர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பராமரிப்பு வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் மட்டுமே இலவசமாக பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ். பி.எம் சூரிய பண்டார வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதன்படி அவரால் வழங்கப்பட்ட எழுத்துமூல உத்தரவுக்கமைய அனைத்து காசாளர்களுக்கும் இதனை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்பு முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பி.எச்.குணசிங்க தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |