இந்து மதமே மிகவும் பழமை வாய்ந்த மதம்! அதனை ஒப்புக் கொள்கிறோம் என்கிறார் ரணில்
இந்து மதம் மிகவும் பழமை வாய்ந்த மதம் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம் அதனை நாம் பாதுகாக்க வேண்டுமென சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வமத தலைவர்களுடன் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பழைமை வாய்ந்த மதம்
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் இந்த ஆகிய அனைத்து மதங்களும் ஒரு அமைச்சுக்கு கீழ் உள்ளது. இதனால் நாம் அமைச்சர்களின் எண்ணிக்கையை பாரியளவில் குறைத்துள்ளோம்.
எனினும், அனைத்து சமயங்களுக்குமான தனித்தனி ஆலோசனை சபைகள் அமைக்கப்பட வேண்டுமென நினைக்கிறேன்.
இதன் மூலம், சமய நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி, குறித்த சபைகளின் தலைவர்களின் அனுமதியுடன் மேற்கொள்ள முடியும்.
இந்து மதம் மிகவும் பழைமை வாய்ந்த மதம் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். இலங்கையில் இந்து மதம் பாதுகாக்கப்படுவதையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் மதம் வந்த விதம்
விகாரைகள் பாதுகாக்கப்படுவதை போல், கோவில்கள் இந்து கடவுள்களும் பாதுகாக்கப்படுகிறார்கள். ஆகையால் இங்கு சிங்களவர்கள் வந்து வழிபாடுகளை மேற்கொள்வதை யாரும் பிரச்சனையாக்கி கொள்ள கூடாதென நான் நினைக்கிறேன்.
மத்திய கிழக்கு நாடுகளுடன் நாம் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இதனால் இலங்கைக்குள் முஸ்லிம் மதம் வந்தது. நாம் எந்த மதத்தையும் கைவிடவில்லை. என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையில் உள்ள ஏதாவது ஒரு மதத்துக்கு அநீதி இழைக்கப்படுமாயின், அது தொடர்பில் எனக்கு தெரியப்படுத்துங்கள். அதற்கான உரிய நடவடிக்கைகளை நான் முன்னெடுப்பேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |