ஹிருணிகா தொடர்பில் நீதிமன்றம் அளித்த உத்தரவு
Supreme Court of Sri Lanka
Hirunika Premachandra
By Sumithiran
மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை (hirunika premachandra) பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை ஹிருணிகாவிற்கு விதிக்கப்பட்டது.
மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை
இளைஞரை கடத்த சதி செய்தல் மற்றும் உதவி செய்தல், அச்சுறுத்தல், தாக்குதல் மற்றும் மிரட்டல் உட்பட 18 குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளியாக காணப்பட்டார்.
கொழும்பு மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை மற்றும் தண்டனையை எதிர்த்து ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி