பிரசித்திபெற்ற கட்டிடம் தீக்கிரை - பெருவில் உச்சமடைந்துள்ள போராட்டம்!
பெருவின் முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ தனது பதவியை இழந்ததுடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெருவின் முன்னாள் அதிபரை விடுதலை செய்யக்கோரியும், தற்போதைய அதிபர் டினா பொலுவார்டே பதவி விலகுமாறும் கோரியும் நாடுமுழுவதும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
பெருவின் தலைநகரில் மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியுள்ளனர், இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதுடன், பின்னர் போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.
போராட்டத்தின் விளைவு
குறித்த போராட்டத்தால் நாடு முழுவதும் பதட்டமான சூழ்நிலை நீடிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த போராட்டத்தின் விளைவாக பலர் உயிரிழந்து மற்றும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரு தலைநகர் லிமாவில் உள்ள வரலாற்றுப் பிரசித்திபெற்ற கட்டிடம் ஒன்று எரிந்து தீக்கிரையாகியுள்ளது.
தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடிய போதும் முடியாமல் போயுள்ளது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்
