ஹிட்லர் விவகாரம் - ரணிலுக்கு தக்க பதிலடி
ஹிட்லர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் ரணில் தன்னை ஹிட்லர் எனக் கூறுவதைப் பார்த்து மீண்டும் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரமும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையும் இருந்தாலும் கூட ரணிலுக்கு மக்கள் ஆதரவு இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர் ரணில் எனவும் அவர் தெரிவித்தார்.
சிரிப்புதான் வருகிறது
AKD replies to President’s Speech!
— Nuzly. (@nuzlyMN) November 26, 2022
“If Hitler is alive today he would suicide again because Ranil compared him self to Hitler”#Srilanka #Ranil pic.twitter.com/XcGTiT1pYa
அதிபர் ரணில் விக்ரமசிங்க தான் ஒரு ஹிட்லர் எனக் கூறும்போது உண்மையில் சிரிப்புதான் வருகிறது. நாடாளுமன்றத்தில் எழுந்து காற்சட்டையை இரு தடவைகள் தூக்கிப்பிடித்துகொண்டு ஹிட்லர் என கூறினால் சிரிப்பு வராமல் வேறு என்ன வரும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மீண்டும் ஒருமுறை ஹிட்லர் தற்கொலை
உண்மையில் ஹிட்லர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தவர். ஹிட்லர் தற்போது உயிரோடு இருந்திருந்தால் மீண்டும் ஒருமுறை தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்திருப்பார் எனவும் தெரிவித்தார்.