கடமை தவறியதால் ஹோமாகம தலைமையக காவல் பரிசோதகரும் பணி இடைநீக்கம்
Sri Lanka Police
Death
Inspector General of Police
By Sindu
காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் ஹோமாகம தலைமையக காவல் பரிசோதகரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் அறிவித்துள்ளார்.
தனது கடமைகளைத் தவறவிட்டமை காரணமாக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடமை தவறியமை
சந்தேகநபரின் மரணம் தொடர்பாக கடமை தவறியமை மற்றும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமை இடம்பெற்றுள்ளதா? என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னரே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
யாழ்ப்பாணம் உட்பட சில இடங்களுக்கான அறிவித்தல் : இன்று முதல் கடவுச்சீட்டுக்கான இணையவழி முன்பதிவு கட்டாயம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |