காவலில் இருந்த சந்தேக நபரின் மரணம்! ஹோமாகம காவல்துறை பொறுப்பதிகாரி கைது
காவல் நிலைய தடுப்புக்காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஹோமாகம காவல் நிலைய குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்புக்காவல் மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம காவல்நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த இஷார ஹர்ஷன என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நடத்தப்படும் விதம்
இந்தச் சம்பவம், தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் பாரிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், சம்பவத்தின் பின்னணியில் உள்ள சூழ்நிலைகள் குறித்து சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்தச் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறை தடுப்புக்காவலில் உள்ள நபர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |