தமிழ் நாட்டு முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி
ஸ்ராலின் வைத்தியசாலையில் அனுமதி
கொரோனா தொற்றுக்கு உள்ளான தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் தனிமைபடுத்திக்கொண்ட முதல்வர் தற்போது மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தி.மு.க தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் காவேரி மருத்துவமனைக்கு சி.ரி.ஸ்கான் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை
கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்து மு.க ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது என காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான மு.க.ஸ்ராலின், உடல்நலம் தேறுவதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமது பிரார்த்தனைகளை தெரிவித்துள்ளனர்.
