ரணிலின் உத்தரவு - யாழ்ப்பாணம் உட்பட நான்கு மாவட்டங்களில் நிறுவப்படவுள்ள வைத்தியசாலைகள்
Cancer
Jaffna
Ranil Wickremesinghe
By Sumithiran
யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நான்கு புற்றுநோய் வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
மருத்துவமனைகளை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களைத் தீர்மானித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் குறித்த மாவட்டங்களில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளைத் தயாரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெல்லிப்பளையில் புற்றுநோய் வைத்தியசாலை

இதேவேளை யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் ஏற்கனவே புற்றுநோய் வைத்தியசாலை இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி