அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படைகள் புகுந்தது ஏன்..! பிரதமர் நெதன்யாகு விளக்கம்
காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட பணயக்கைதிகள் இருந்ததற்கான "வலுவான அறிகுறிகள்" இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
"நாங்கள் மருத்துவமனைக்குள் நுழைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்" என்று அவர் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
படைகள் நுழைந்தபோது பணயக்கைதிகள் இல்லை
அல்-ஷிஃபாவின் கீழ் ஹமாஸ் ஒரு பெரிய தளத்தை அமைத்திருப்பதாக இஸ்ரேல் பலமுறை குற்றம் சாட்டியது.ஆனால் அதை ஹமாஸ் மறுக்கிறது.
படைகள் புதன்கிழமை மருத்துவமனைக்குள் நுழைந்தன, ஆனால் அவர்கள் அங்கு சென்றபோது, பணயக்கைதிகள் அங்கு இல்லை என்று நெதன்யாகு கூறுகிறார்.
பணயக்கைதிகள் பற்றிய புலனாய்வு தகவல்கள்
"அவர்கள் [அங்கே] இருந்திருந்தால், அவர்கள் வெளியே எடுக்கப்பட்டிருப்பர்," என்று அவர் குறிப்பிட்டார்.
அவர் தனது அரசாங்கத்திற்கு "பணயக்கைதிகள் பற்றிய புலனாய்வு" தகவல்கள் கிடைத்ததாக தெரிவித்தார்., ஆனால் "நான் அதைப் பற்றி குறைவாகச் சொன்னால் நல்லது" என்று மேலும் குறிப்பிட்டார்.