செங்கடலில் பதற்றம் : பிரித்தானிய எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் : அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
செங்கடலில் பயணித்த பிரித்தானிய எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய அதேவேளை யேமன் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹவுத்தி செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஏமன் நகரான மோச்சாவில் இருந்து தென்மேற்கே சுமார் 15 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை
பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான யுகேஎம்டிஓ, பனாமா கொடியுடன் கூடிய கப்பல் இரண்டு முறை தாக்கப்பட்டு சேதம் அடைந்ததாக தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலில் காயமோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஏமனின் தென்மேற்கு தைஸ் கவர்னட்டில் இருந்து மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹவுத்திகள்
இந்த தாக்குதலுக்கு ஹவுதிகள் பொறுப்பேற்றுள்ளனர். குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா சனிக்கிழமை தொலைக்காட்சி உரையில் ஆண்ட்ரோமெடா ஸ்டார் என்று அழைக்கப்படும் "பிரிட்டிஷ்" கப்பல் குறிவைக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக "நேரடியாக தாக்கப்பட்டதாகவும்" கூறினார்.
எனினும் தாக்குதலுக்குள்ளான கப்பல் ஆந்த்ரோமெடா ஸ்டார் என்றும், சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் பயணத்தைத் தொடர்வதாகவும் அமெரிக்க மத்தியக் கட்டளை உறுதிப்படுத்தியது.
இதற்கிடையில், யேமன் வான்வெளியில் அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹவுத்தி செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இஸ்ரேல்-பலஸ்தீனப் போர் தொடங்கிய பின்னர் ஹவுத்திகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் மூன்றாவது ஆளில்லா விமானம் இதுவாகும்.