கடவுச்சீட்டுக்காக காத்திருப்போருக்கு ஓர் அதிர்ச்சி தகவல் - கடவுச்சீட்டு வழங்குவதில் சிக்கல்
Sri Lanka
Passport
By pavan
முறைமை கோளாறு காரணமாக கடவுச்சீட்டு வழங்குவதில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
எனவே நாடளாவிய ரீதியில் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கணனி செயலிழந்ததன் காரணமாக இந்த செயல்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அமைப்பை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தபால் சேவை ஊடாக அனுப்ப நடவடிக்கை
ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பித்த கடவுச்சீட்டுகளை தபால் சேவை ஊடாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி