உடலுக்கு ஆபத்தான யூரிக் அமிலம்...! உடனே கட்டுப்படுத்த இப்படி செய்து பாருங்கள்
யூரிக் அமிலம் (அல்லது யூரேட் ) என்பது, கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றால் ஆன ஒரு கரிமச் சேர்மமாகும்.
இது இரத்தத்தில் சேரும் கழிவுப் பொருளாகும். பியூரின்கள் பொருட்களை உடல் உடைக்கும் போது உருவாகும் ஒரு ரசாயனமாகும்.
பியூரின்கள் உடலில் தானாக உற்பத்தியாகும்.
இதை தவிர சில ஆட்டிறைச்சி கல்லீரல், நெத்திலி மீன், உலர்ந்த பீன்ஸ், பட்டாணி உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ளும் போதும் உற்பத்தியாகிறது.
ஹைப்பர்யூரிசிமியா
இந்த அமிலத்தின் பெரும் பகுதி இரத்ததில் கரைந்து சிறுநீரகத்தை அடைகிறது.
சிறுநீரகம் அதை வடிகட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.
இவை உடலில் அதிகமாக இருந்தால் ஹைப்பர்யூரிசிமியா என்னும் நிலை உண்டாகும்.
இவை மூட்டுகளில் படிந்து கீல்வாதம் மற்றும் சிறுநீரக கல்லை உருவாக்கலாம்.
இதை தவிர எலும்பு, மூட்டு, திசு சேதங்கள், சிறுநீரக நோய் மற்றும் இதய நோய்களை உண்டாக்கும்.
தவிர்க்க வேண்டியவை
ப்யூரின்கள் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பானங்கள் யூரிக் அமிலத்தின் அளவை அதிகமாக்கலாம்.
ஆகையால், இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
இனிப்பு சுவை அதிகம் கொண்ட பழங்களை எடுத்துக் கொள்ளும் போது, அதில் இருக்கும் ப்ரக்டோஸ் என்னும் பொருள் உடலில் யூரிக் அளவை அதிகரிக்க செய்யும்.
குறிப்பாக அன்னாசி, சப்போட்டா பழங்கள் அதிக சத்துக்களை கொண்டிருந்தாலும், இவை உடலில் யூரிக் அளவை அதிகரிக்க செய்யும்.
துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் புட்ஸ், ரெடிமேட் உணவுகள் உள்ளிட்டவை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சேர்த்துக் கொள்ள வேண்டியவை
ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்ப்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
காய்கறிகளில் பூசணிக்காய், செள செள, வெண்டை, புடலங்காய், பீர்க்கங்காய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பருப்புகளை சேர்த்துக் கொள்ளலாம். பாதாம், வால்நட்ஸ் போன்றவை யூரிக் அமில அளவை குறைக்கும்.
இவற்றை சாப்பிட்டு வரலாம்.
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியாகும்.
சிறுதானிய உணவுகளை சேர்த்துக் கொள்ளுவதும் நல்லது.
