குறுகிய சட்டங்களுக்குள் சுருக்கி நெருக்கடியில் இருந்து மீள முடியாது - சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டு
பொருளாதார நடவடிக்கைகளை குறுகிய சட்டங்களுக்குள் சுருக்கி தற்போதுள்ள பிரச்சினையிலிருந்து மீள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று(07) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போது இவ்வாறு கூறிய அவர், நாட்டில் நவீனமயமாக்கப்பட்ட உகந்த திட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது வங்குரோத்தடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
சர்வதேச ரீதியாக கையாளக்கூடிய முறையான திட்டமிடல்
நேற்றைய தினம் அதிபர் ஆற்றிய விசேட உரைக்குப் பதிலளித்த அவர், தசராஜ தர்ம கோட்பாடுகளுக்கு அமைவாகவும், உலக நாடுகளுடன் சர்வதேச ரீதியாக கையாளக்கூடிய முறையான திட்டமிடலுடன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியதன் தேவைப்பாடு குறித்தும் சுட்டிக்காட்டினார்.
இளம் தலைமுறையினரை ஆட்சியில் பங்கேற்கச்செய்தல், பங்கேற்பு ஆட்சி, நிலைபேறான இலக்குடனான சர்வதேச உறவுகள் தொடர்பாகவும் தனது சஜித் பிரேமதாச தனதுரையில் விளக்கிக் கருத்துரைத்தார்.