வவுனியாவில் லட்சக்கணக்கான பணம் - கஞ்சாவுடன் மூவர் கைது
பெருமளவு பணம் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்களை வவுனியா விசேட குற்றப்புலனாய்வு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று(03) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லட்சக் கணக்கிலான பணம்
சந்தேகநபர்கள் கார் ஒன்றில் போதை பொருள் கடத்த முற்பட்டப் போது வழிமறித்த காவல்துறையினர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து, காரினுள் ஒன்பது கிலோகிராம் கஞ்சா மற்றும் பத்தொன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
அதன்போது, வவுனியா, நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 34, 27, 25 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |