மூடப்படாத சடலக்குழிகள் விவகாரத்தில் மாநகர ஆணையாளரை எச்சரித்த நீதிபதி
யாழ்ப்பாணம்- கோம்பயன் மயானத்தில் முறையாக பராமரிக்கப்படாத சடலக்குழி விவகாரம் தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர ஆணையாளருக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - கோம்பயன் மயானத்திற்கு அருகாமையில் கடந்த வியாழக்கிழமை சிசு ஒன்றின் தலை மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் உட்பட மூவரை நேற்றையதினம் (16) யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் முன்னிலையாகுமாறு வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் அவர்கள் முன்னிலையாகினர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் பொறுப்பில் உள்ள கோம்பயன் மயானத்தில் குழி ஒன்று வெட்டப்பட்டு அதில் யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் இறந்த சிசுக்களை அடக்கம் செய்து வந்துள்ளனர்.
ஆனால் குறித்த குழி மூடப்படாமல் இருந்ததுடன் ஏற்கனவே குழியில் மனித எச்சங்கள் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் கடந்த வியாழக்கிழமை (10) யாழ்ப்பாண நீதவான் மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இது தொடர்பில் விரிவான செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காணுங்கள்.