தமிழினப் படுகொலைகளுக்கு சுயாதீன விசாரணை கோரி மனிதச்சங்கிலி போராட்டம்
Germany
Human chain protest
Tamil massacre
By Vanan
இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலைகளுக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை கோரி, ஜேர்மனியில் தலைநகர் பேர்லின் உட்பட்ட 53 நகரங்களில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில், தமிழர் தாயகத்துக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கை உட்பட்ட முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
நாளை(28) ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வு ஆரம்பிக்கவுள்ள பின்னணியில், ஜேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டங்கள் நேற்று பிற்பகல் இரண்டு மணிமுதல் மாலை நான்கு மணிவரை இடம்பெற்றிருந்தன.
இதேபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் மிதிவண்டிப்பயணம் நேற்று பதினோராவது நாளை பிரான்ஸ் ஊடாக கடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்