கொழும்பில் உடலற்ற அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மனிதத் தலை

Colombo Sri Lanka Sri Lanka Police Investigation Death
By Pavi Aug 30, 2026 09:07 AM GMT
Report

கொழும்பு மொரட்டுமுல்ல, இஹல இதிபெத்த குரே பகுதியில் உடலற்ற மனித தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக  119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, மொரட்டுமுல்ல காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். 

இன்று (30.08.2026) காலை சுமார் 8 மணியளவில் மரவேலைப் பட்டறையின் உரிமையாளர் ஒருவர் குறித்த மனித தலையை அவதானித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு சொந்தமான துப்பாக்கி ஒன்று மீட்பு

பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு சொந்தமான துப்பாக்கி ஒன்று மீட்பு

உடலற்ற மனிதத்தலை

தலை, உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மரவேலைப் பட்டறையின் பின்புறம், ஆற்றங்கரைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உடலற்ற அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மனிதத் தலை | Human Head Was Found In Moratumulla

சம்பவ இடத்திற்கு மொரட்டுமுல்ல காவல்துறையினர், காவல் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சட்டத்தரணியான திருமதி சந்தமாலி வருகை தந்து, சம்பவ இட ஆய்வு ஒன்றை நடத்தினார்.

ஆய்வின்படி மீட்கப்பட்ட மனித தலை மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், அதனை விலங்குகள் தின்று சேதப்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுமுல்ல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

களுத்துறை சிறைச்சாலையில் கைதியின் காதை வெட்டிய மற்றொரு கைதி

களுத்துறை சிறைச்சாலையில் கைதியின் காதை வெட்டிய மற்றொரு கைதி

சிகிரியா அருகே இரவு நேரத்தில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

சிகிரியா அருகே இரவு நேரத்தில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      



ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026