பாரிய அரசியல் சக்தியாக உருவெடுக்கவுள்ள மனித நேய மக்கள் கூட்டணி
தேர்தல் காலங்களில் மாத்திரம் தோன்றி பின்னர் காணாமல் போய்விடும் கூட்டணிகளைப் போன்றல்லாமல், பாரிய அரசியல் சக்தியாக எமது கூட்டணி உருவெடுக்கும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் மனித நேய மக்கள் கூட்டணியின் செயலாளருமான பிரபா கணேஷன் தெரிவித்தார்.
மனிதநேய மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
'' மனித நேய மக்கள் கூட்டணி தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல. ஊழல், மோசடியற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது இலக்காகும்.
நாட்டின் தேர்தல் காலம்
தேர்தல் காலத்தில் பல கூட்டணிகள் உருவாக்கப்படுவதும், பின்னர் அவை பிளவுபட்டுச் செல்வதும் வழமையாகக் காணப்படுகிறது.

தேர்தல் காலங்களில் மாத்திரம் நானும் அரசியல்வாதிதான் எனக் கூறிக் கொண்டு சிலர் வருவதும், பின்னர் அவர்கள் காணாமல் போய் விடுவதுமே தற்போதுள்ள உண்மை நிலவரமாகும்.
பலர் இணைவதற்கான சாத்தியம்
ஆனால் எமது கூட்டணி தேர்தல் காலங்களிலும் ஒன்றுபட்டு செயற்படும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. பல முரண்பாடுகளை கடந்து இந்த கூட்டணியை நாம் உருவாக்கியிருக்கின்றோம்.

இக்கூட்டணி எதிர்காலத்தில் பலம் மிக்க அரசியல் சக்தியாக உருவெடுக்கும். பல முக்கிய தரப்பினர் எம்முடன் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன'' என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 12 மணி நேரம் முன்