சிவப்பு கிரகத்தில் 200 ஆண்டுகள் வரை உயிர்வாழும் மனிதனின் விந்தணுக்கள்! வியப்பில் விஞ்ஞானிகள்
மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் இனப்பெருக்கம் செய்யச் சாத்தியமில்லை என்று முன்னர் கூறப்பட்டு வந்தது. இதை விஞ்ஞானிகள் பொய் என்று நிரூபித்துள்ளனர்.
அதாவது, மனிதனின் விந்தணுக்கள் செவ்வாய் கிரகத்தில் சுமார் 200 ஆண்டுகள் வரை உயிர்வாழச் சாத்தியம் உள்ளது என்று கூறியுள்ளனர்.
இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவலின் படி, விந்தணுக்கள் சிவப்பு கிரகத்தில் சுமார் 200 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று நம்புகின்றனர்.
இதற்கு முன்பு, ஆராய்ச்சியாளர்கள் இனப்பெருக்கம் செய்வதற்கான சாத்தியம் இல்லை என்று கூறிவந்தனர்.
குறிப்பாக விண்வெளியில் உள்ள கதிர்வீச்சு நமது மனித விந்தணுக்களில் உள்ள டி.என்.ஏ-வை அழித்துவிடும் என்று கூறியிருந்தனர்.
இதில் விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் எலியின் விந்தணுக்களை வைத்து கதிர்வீச்சு சோதனை நடத்தியுள்ளனர்.
தற்பொழுது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, விண்வெளி நிலையத்தில் சேமிக்கப்பட்ட எலியின் விந்து இன்னும் ஆரோக்கியமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
அவர்கள் அதை பூமியில் உள்ள எக்ஸ்-ரே கதிர்களுக்கும் வெளிப்படுத்தினர் மற்றும் அது கருவுறுதலைப் பாதிக்கவில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.