யாழ் வடமராட்சியில் நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீவைப்பு!
யாழ்ப்பாணம் (Jaffna)- வடமராட்சி கிழக்கு கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (08) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ”நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் கட்டைக்காடு இராணுவ முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது.
வேகமாக பரவிய தீ
நிலைமையை பார்த்த இராணுவத்தினர் தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனத்தை வரவழைத்ததுடன் மருதங்கேணி இராணுவ முகாமில் இருந்தும் தீயை அணைப்பதற்காக 200 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் விஷமிகளால் வைக்கப்பட்ட தீ பரவலாக பற்றி எரிகின்ற போது தீயணைப்பதற்கு இராணுவத்தினர் கடுமையாக போராடிய நிலையிலும் ஏனைய பனை மரங்களுக்கும் வேகமாக தீ பரவியது.
இதேவேளை தற்பொழுது பனம்பழ பருவகாலம் என்பதால் இந்த பனைகளில் இருந்து பயன் பெறும் மக்கள் குறித்த சம்பவத்திற்கு தங்களுடைய கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 21 மணி நேரம் முன்
