அமெரிக்க விசாவுக்காக காத்திருப்போருக்கு வெளியான அதிரடி அறிவிப்பு!
அமெரிக்க விசா என்பது எவருக்கும் வழங்க வேண்டிய கட்டாய உரிமை இல்லை எனவும், அது ஒரு அனுமதி மட்டுமே எனவும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
இதன் முதல்கட்டமாக, ஹங்கேரி தலைநகரான புடாபெஸ்டில் நடந்த ஐரோப்பிய பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்றார்.
குடியுரிமை அதிகாரிகள்
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ள அவர், “ஒரு நபர் சுற்றுலாப் பயணியாகவோ, மாணவராகவோ அல்லது செய்தியாளராகவோ அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டு, அங்கு அமெரிக்காவின் தேசிய நலன்கள் அல்லது பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்பட்டால் அவரது விசா உடனடியாக ரத்து செய்யப்படும்.

விசா விண்ணப்பதாரர் இத்தகைய செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் குடியுரிமை அதிகாரிகளுக்குச் சந்தேகம் வந்தால் அவருக்கு விசாவே வழங்கப்படாது” எனத் தெரிவித்துள்ளார்.
நிதி நிலைமை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்றது முதல், குடியுரிமைச் சட்டத்தைக் கடுமையாக்கி வருகிறார்.

இதன்படி, அமெரிக்காவின் பொது நலநிதியைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 75 நாடுகளுக்கு விசா வழங்குவதைக் கடந்த மாதம் தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தியது.
இதில் ரஷ்யா, ஈரான், சோமாலியா, கியூபா மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகள் அடங்கும். மேலும், விசா விண்ணப்பதாரர்களின் நிதி நிலைமை, கல்வி, வேலைவாய்ப்புத் திறன் மற்றும் ஆங்கில மொழி அறிவு உள்ளிட்டவை குறித்து மிகத் தீவிரமாகப் பரிசோதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்