ட்ரம்ப்பின் வலிமையான இராணுவ முழக்கம்: ஈரான் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை
பலமான இராணுவம் மீண்டும் எழ முடியாதபடி தாக்கப்பட்ட வரலாறும் உண்டு என ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி தெரிவித்துள்ளார்.
உலகிலேயே அமெரிக்க இராணுவம் வலிமையானது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து வருவதாக சுட்டிக்காட்டி அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையொன்றினை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராணுவத் தளவாடங்கள்
இது தொடர்பில் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஈரானை நோக்கிப் போர்க்கப்பல்களை அனுப்பி வருவதாக அமெரிக்கர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இராணுவத் தளவாடங்களில் போர்க்கப்பல் என்பது ஆபத்தானதுதான் அதேநேரத்தில், போர்க்கப்பலைக் கடலின் ஆழத்திற்கு அனுப்பும் அளவுக்கு மோசமான ஆயுதங்கள் உள்ளன.

47 ஆண்டுகளாக ஈரானை, அமெரிக்காவால் அழிக்க முடியவில்லை என ட்ரம்ப் தெரிவித்து வருகிறார்.
இது சிறந்த ஒப்புதல் உங்களாலும் அதனைச் செய்ய முடியாது என நான் கூறுகிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்