பரபரப்புக்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையம்! தினசரி நாட்டை விட்டு வெளியேறும் நூற்றுக்கணக்கானோர்
Sri Lanka Refugees
Sri Lanka Airport
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்
இலங்கையை விட்டு நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இளைஞர்கள், யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணிக்காக ஒரு சிலர் மாத்திரமே சென்று வந்த நிலையில் தற்போது தினசரி நூற்றுக்கணக்கானோர் வெளியேறுவதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பான ஒரு இடமாக கட்டுநாயக்க
இந்நிலையில் தற்போது பரபரப்பான ஒரு இடமாக கட்டுநாயக்க விமான நிலையம் மாறியுள்ளது.
நிலைமையை வெளிப்படுத்தும் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
