போதைப்பொருளுடன் சிக்கிய என்.பி.பி உறுப்பினரின் கணவர்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு
ஹெரோயின் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) நகர சபை உறுப்பினரின் கணவர், தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, மேலதிக விசாரணைக்காக நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பாடசாலை அதிபர், இன்று (06) பிற்பகல் அனுராதபுரம் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
அதன்போது, சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
சொத்து தொடர்பான சிறப்பு விசாரணை
சந்தேக நபரின் மனைவி, நகரசபை உறுப்பினர் டிஸ்னா நிரஞ்சலா, பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கொஸ்கொட சுஜியின் உறவினர் என்பதையும் காவல்துறையினர் வெளிப்படுத்தினர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பாடாசலை அதிபரின் சொத்துக்கள் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.185 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் காவல்துறையினர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |