இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்குரிமை! மத்திய அரசுக்கு சென்ற முக்கிய கோரிக்கை
பல தசாப்தங்களாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்குரிமை மற்றும் முழு குடியுரிமை வழங்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் எஸ். ராம்தாஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் நேற்று(05.11) வெளியிட்ட அறிக்கையிலே இந்த விடயத்தை அவர் முன்வைத்துள்ளார்.
அதில் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளில் பலர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதையும் அவர் ராம்தாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இளைய தலைமுறையினரின் நிலைமை
இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்ததாக ராம்தாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "2009 இல் போர் முடிவடைந்த பின்னரும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் இங்கு தொடர்ந்து தஞ்சம் புகுந்துள்ளனர்.
இன்று, கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்கள் தமிழ்நாட்டில் 116 அகதி முகாம்களில் வாழ்கின்றனர். இந்தியாவில் பல தசாப்தங்களாக வாழ்ந்தாலும், இந்த அகதிகள் இன்னும் சுதந்திர குடிமக்களாக வாழ அனுமதிக்கப்படவில்லை.
இங்கு பிறந்து படித்த இளைய தலைமுறையினர் இன்னும் அடிப்படை உரிமைகளை இழந்துள்ளனர். பலர் தங்கள் பள்ளி மற்றும் பல்கலைக்கழக கல்வியை முடித்துள்ளனர். ஆனால் அவர்களால் சட்டத்தின்படி அரசு வேலைகளுக்கு கூட விண்ணப்பிக்க முடியவில்லை"
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |