யாழ்ப்பாணத்திற்கு பூசப்பட்ட சிங்கள முலாம் :அதிர்ச்சி தரும் பின்னணி
வடக்கு,கிழக்கில் தமிழர்களின் நிலப்பறிப்பு கனகச்சிதமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு அரச நிறுவனங்கள் வெகுவாக துணை போகின்றன. குறிப்பாக தொல்லியல் திணைக்களம் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என இந்த அரச நிறுவனங்கள் திட்டமிட்ட ரீதியில் தமிழரின் நிலங்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வாறு தமிழர்களின் அடையாள சிதைப்பு இடம்பெற்று வரும் நிலையில் சில அரச அலுவலகங்களும் பாடசாலைகளும் அதற்கு துணை போவது குறித்து மக்கள் மத்தியில் சில கேள்விகள் எழுவது இயல்பானது.
அந்த வகையில் தான் ரி20 உலககிண்ணம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டது.இந்த உலககிண்ணம் எடுத்து வரப்பட்டதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த உலககிண்ணம் சிங்கள முறையிலான பண்பாட்டு முறையில் வரவேற்கப்பட்டதுதான் தமிழ் மக்கள் மத்தியில் முகச்சுழிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தெடார்பாகவும் மேலும் பல விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழ் சமகாலம் நிகழ்ச்சி...