போதைப்பொருளுடன் சிக்கிய பாடசாலை அதிபர்! அரசியல் தொடர்பு குறித்து வலுக்கும் சர்ச்சை
அனுராதபுரம் எப்பாவல பகுதியில் உள்ள ஒரு முன்னணி ஆரம்ப பாடசாலையின் அதிபர் ஒருவரையும், அவருடன் ஒரு கிலோகிராமுக்கு மேல் ஹெராயின் வைத்திருந்த மற்றொரு சந்தேகநபரையும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கைதுசெய்துள்ளனர்.
குறித்த அதிபர், தேசிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேலியகொட நகர சபை உறுப்பினர், டிஸ்னா நிரஞ்சலாவின் கணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரின் மனைவி பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கொஸ்கொட சுஜியின் உறவினர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரின் சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
முன்னர் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
எப்பாவல - தெடகல சுற்றிவளைப்பு
எப்பாவல - தெடகல பகுதியில் உள்ள அதிபருக்குச் சொந்தமான ஒரு ஹோட்டலில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, குறித்த ஹோட்டலின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 1 கிலோகிராம் 185 கிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைகளின் போது, போதைப்பொருளை அளவிட பயன்படுத்தப்படும் மின்னணு தராசு மற்றும், குறித்த அதிபரால் அருகிலுள்ள ஏரியில் வீசிய பொலிதீன் சீல் செய்யும் இயந்திரத்தையும் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் செய்தித் தொடர்பாளர் ஒருவலை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்

'சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு எதிராக தனது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்.
இருப்பினும், சந்தேக நபரின் அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், தற்போதைய அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கப் பின்பற்றும் கொள்கையாக, காவல்துறையினர் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த அனுமதிப்பது சமூகத்தில் பாராட்டப்படுகிறது” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |