பாடசாலை மைதானத்தில் வைத்து மனைவியை கத்தியால் குத்திய கணவன்
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
பிள்ளையை முதலாம் தரத்திற்கு சேர்ப்பதற்காக பாடசாலைக்கு வந்த தாய் ஒருவரை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைத்து கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெவலேகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதலில் பெண்ணின் கழுத்து மற்றும் கை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெவலேகம காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
தெவலேகம மா ஓயா வத்த பிரதேசத்தில் 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண்ணின் கணவர் சில காலமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்ததாகவும், தொலைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் கத்தியால் குத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி