லண்டனில் யாழ்ப்பாண இளம் குடும்பப் பெண் மீது கொலை முயற்சி
Jaffna
London
By Kiruththikan
பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பகுதி ஒன்றில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட 30 வயதான இளம் குடும்பப் பெண்ணை குத்திக் கொலை செய்ய முயன்றதாக கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவர் போதைக்கு அடிமையானவர் எனவும் மனைவி மற்றும் குழந்தையை அறைக்குள் பூட்டிய பின்னர் அவர்களை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாகவும் தெரியவருகின்றது.
மனைவி மற்றும் குழந்தையின் அலறல் சத்தம் அயல் வீட்டில் உள்ளவர்களுக்கு கேட்டதால் அவர்கள் காவல்துறையினருக்கு முறையிட்டு அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் கணவரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
மேலதிக விசாரணை
இதேவேளை, கடை ஒன்றில் வேலை செய்யும் கணவர் எதற்காக கொலை செய்ய முயன்றார் என்பது தொடர்பான மேலதிக விபரங்கள் விசாரணையில் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்