கணவன் மனைவி தகராறு - தடுக்க சென்ற பெண்ணுக்கு நடந்த அவலம்!
India
By pavan
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் மனைவியை தாக்கிய நபர் ஒருவர், தடுக்க முயன்ற பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில், இளைஞர் ஒருவர் தன்னிடம் இருந்து பிரிந்து சென்று வாழ்ந்து வந்த மனைவியை காண சென்றுள்ளார்.
அவரது இளம் மனைவி திவா பகுதியில் பெண்ணொருவருடன் தங்கியிருந்துள்ளார்.
மனைவி மருத்துவமனையில் அனுமதி
அங்கு சென்ற அவரது கணவர் தனது மனைவியை கத்தியால் தாக்கியுள்ளார்.
இதனை தடுக்க முயன்ற மற்றொரு பெண்ணை சரமாரியாக கத்தியால் அவர் தாக்கியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த குறித்த பெண் உயிரிழந்தார்.
உள்ளூர் வாசிகள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த இளைஞரை கைது செய்தனர்.
மேலும் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி