ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் விபத்து
Colombo
Accident
Hatton
By Beulah
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் எதிர்திசையில் ஹட்டனிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நேற்று(18) விபத்து இடம்பெற்றதாக வட்டவளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை ரொசெல்ல பிரதேசத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோசமான வானிலை
ஹட்டனில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த லொறி அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக சறுக்கி கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் லங்காம பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, மேலும் விபத்தில் லொறியின் சாரதிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் லொறியும் லங்காமா பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி