டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த வோர்னர்!
அவுஸ்திரேலிய அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அடுத்த வாரம் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னர் தயாராகி வருகிறார்.
டெஸ்ட் வாழ்க்கை
அதன் பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான ஏஷஸ் தொடரில் அவர் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வோர்னர் அறிவித்துள்ளார்.
36 வயதாகும் வோர்னர், 2024ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் வாழ்க்கையை முடிக்க விரும்புவதாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வோர்னர் 8158 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இதில் 25 சதங்கள், 34 அரைசதங்கள் அடக்கும். அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 335 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 11 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்