இரண்டாவது ஒருநாள் தொடரில் ஆப்கான் அணிக்கு இமாலய இலக்கு..!
Sri Lanka Cricket
Afghanistan Cricket Team
ICC World Cup 2023
By Dharu
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 324 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை அணி
இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 78 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
துமித் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், சதீர சமரவிக்கிரம 33 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பந்து வீச்சில் பரீட் அஹமட் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்