வீட்டு கூரையின் மீது பாரிய பனிகட்டி: வியப்பில் பிரதேசவாசிகள்
தகம கிராமசேவா களத்தில் அமைந்துள்ள ரின்பொல மொரகொல்ல தோட்டத்தின் புதிய பிரிவில் உள்ள தோட்ட வீடொன்றின் கூரை மீது பாரிய பனிக்கட்டி ஒன்று விழுந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவமானது நேற்று(12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஐந்து கிலோவிற்கும் அதிக நிறையுடைய பனிக்கட்டி ஒன்றே இவ்வாறு வீட்டின் மீது வீழ்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பனிப்பாறை
பனிப்பாறை வீட்டின் மீது விழுந்த போது அங்கு யாரும் இல்லையெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் வீட்டின் மேற்கூரை தகரத்தால் மூடப்பட்டிருந்ததாகவும் பலத்த சத்தத்துடன் இந்த பனிக்கட்டி கூரையின் மீது விழுந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீட்டில் ஒரு தாயும் மகனும் வசித்து வருவதுடன், மகன் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில் தாய் அருகில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார்.
மழை
நேற்று இரவு 7:30 மணியளவில் தாய் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் சொட்டுவதை கண்டு மகனுக்கு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வீட்டின் மேற்கூரையில் ஏறி ஆய்வு செய்த போது இந்த பனிக்கட்டியை அவர் கண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்றைய தினம், குறித்த பகுதியில் மழையுடனான வானிலை நிலவவில்லையென அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |