லண்டனில் குழந்தைகள் அமைதி மாநாடு: ஈழத்தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
கண்ணீரிலிருந்து மாற்றம் நோக்கி என்ற தொனிப்பாட்டுடன், அனைத்துலகக் குழந்தைகள் அமைதி மாநாடு (ICPN) ஒன்று லண்டனில் (London) இடம்பெறவுள்ளது.
குறித்த மாநாடு ஒகஸ்ட் 16 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டிற்கான அறிமுக நிகழ்வு, ஜூன் 26 ஆம் திகதி பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையில் (House of Lords) இடம்பெற்றது.
பல்வேறுபட்ட நாடு
நிகழ்வில் பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த 200 மேற்பட்ட பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள், Rotary Club உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் கலந்து கொண்டனர்.
குழந்தைகளின் குரலை உலக அரங்கில் கொண்டு வரும் முக்கியமான முயற்சியாக இது விளங்கியதாக எடுத்துக்காட்டப்பட்டது.
நிகழ்வின் போது மாநாட்டின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமையிலான உரைகள் இடம்பெற்றன.
ஈழத்தமிழ் மாணவர்கள்
இந்த மாநாடு அமைதி கல்வியை மரபு மாறா சமூகப் பொறுப்புடன் இணைக்க முயற்சி செய்வதுடன் பயத்துக்குப் பதிலாக பரிவு, போட்டிக்குப் பதிலாக புரிதல், கட்டுப்பாட்டிற்குப் பதிலாக உரையாடல் என்பதே மாறாட்டின் அடிப்படை நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இம்மாநாட்டில் ஈழத்தமிழ் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்கவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த இன அழிப்பை நினைவுகூறும் வகையில், அமைதிக்கான குரலாக சிறுவர்களை வழிநடத்தும் முயற்சி இது என்று மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பாலநந்தினி பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
