கொவிட் -டெங்கு நோயாளிகளால் நிரம்பி வழியும் அங்கொட வைத்தியசாலை
fill
idh hospital
dengue-corona-patients
By Sumithiran
அங்கொட தொற்று நோய்கள் நிறுவகத்தில் (IDH வைத்தியசாலை) அனுமதிக்கப்பட்ட கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது என அதன் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க (Dr. Hasitha Attanayake) தெரிவித்தார்.
இதேவேளை, கொவிட் நோயாளர்களுக்கு மேலதிகமாக 30 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கு முன்னர் 50க்கும் குறைவான கொவிட் நோயாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், தற்போது வைத்தியசாலையே அனைத்தையும் நிர்வகித்து வருவதாகவும் அத்தநாயக்க தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொவிட் வேகமாகப் பரவி வருவதால், எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
ஒக்சிஜன் தேவைப்படும் பல நோயாளிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
