பெரமுனவிற்கு ஆபத்து -ரணிலிடம் ஓடோடிச் சென்ற பசில்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த 30ஆம் திகதி இடம்பெற்றது.
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் புதிய கட்சியை உருவாக்கும் திட்டம் தொடர்பில் பசில் ராஜபக்ச,அதிபருக்கு இதன்போது அறிவித்தார்.
புதிய கட்சி உருவாக்கம்
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது ராஜகிரிய பிரதேசத்தில் அலுவலகம் ஒன்றை நடத்தி வருவதாகவும், பொதுஜன பெரமுன மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் உள்ள பல்வேறு தரப்பினருடனும் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடி வருவதாகவும் பசில் ராஜபக்ச அதிபருக்கு அறிவித்துள்ளார்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளினால் பொதுஜன பெரமுனவிற்கு பாதகமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சர்கள் நியமனம்
அது மட்டுமன்றி புதிய அமைச்சர்கள் நியமனம் மற்றும் பதவிப்பிரமாணம் குறித்தும் இருவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த 30ஆம் திகதி இந்தக் கூட்டம் இடம்பெற்றதாகவும் அதன் பின்னர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்து அதிபர் கலந்துரையாடியதாகவும் தெரியவந்துள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)