பிரபாகரன் உயிரோடு வந்தால் பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழும் - அ.தி.மு.க அறிவிப்பு
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு வந்தால் பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழும். தமிழக மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் இது தொடர்பில் தான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பழ.நெடுமாறன் தெரிவித்திருப்பது பலத்த சர்ச்சையையும் விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளது.
மகிழ்ச்சியை தரும் செய்தி
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வைகைச் செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. எதிரியாக இருந்தாலும் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி மகிழ்ச்சியைதான் அளிக்கும்.
பிரபாகரன் உயிரோடு வந்தால் பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழும். தமிழக மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். அவருடைய வரவு நல்வரவாக இருக்க வரவேற்கிறோம்” என்றார்.
பிரபாகரனை சந்திக்க தயார்
இதேவேளை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி கூறுகையில், “பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி தான். பிரபாகரன் வந்தால் நான் சந்திப்பேன். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை. பழ.நெடுமாறன் பிரபாகரனை காட்டினால் நானும் சந்திப்பேன்” என்றார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)