காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை : வெளியான அறிவிப்பு
Sri Lanka
India
Nagapattinam
By Shalini Balachandran
காங்கேசன்துறைக்கும் (Kangesanthurai) நாகப்பட்டினத்திற்கும் (Nagapattinam) இடையிலான பயணிகள் கப்பல் சேவை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில், இன்று (12) கப்பல் சேவை இடம்பெறாது என கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி (Sundararaj Ponnusamy) தெரிவித்துள்ளார்.
காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்தானது இன்று (12) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தொழில்நுட்ப கோளாறு
இருப்பினும், சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக கப்பல் சேவையானது இன்று இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்