உண்மையான அன்பு இருந்தால்.. ரணிலுக்கு விடுக்கப்பட்ட சவால்
SJB
Ranil Wickremesinghe
Mujibur Rahman
President of Sri lanka
Election
By Sumithiran
அதிபர் ரணில் தன்னை நேசித்தால் தேர்தலை நடத்துமாறு அவரிடம் கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் முஜுபர் ரஹ்மான் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என அதிபர் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பொய்யானது எனவும் அதிபருக்கு அப்படியான அன்பு இருந்தால் செய்திகளை அனுப்பாமல் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ரஹ்மான் தெரிவித்தார்.
உண்மையான அன்பை உறுதி செய்யுங்கள்
தேர்தலை நடத்தி உண்மையான அன்பு இருப்பதை உறுதி செய்யுமாறு அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அரசியலில் இருந்து ஓய்வு
தனக்கு வயதாகும் வரை அரசியலில் இருக்கும் எண்ணம் இல்லை என்றும், வயதாகிவிட்டால், அதிபர்கள் போல் அழைக்கப்படுவார்களோ என்ற பயத்தில், வயதாகும் முன், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். .

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி