வேலணையில் அனுமதியின்றி வகை தொகையாக கட்டப்படும் அனுமதியற்ற கட்டடங்கள்!

Jaffna Sonnalum Kuttram
By Theepan Apr 04, 2026 08:17 PM GMT
Report

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி தனி நபர்களால் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை வகைதொகை இன்றி அதிகரித்துச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க பிரதேச சபையும் அலட்சியப் போக்குடன் நடந்துகொள்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பிரதேச சபையின் ஒரு சில உறுப்பினர்களும் பின்னணியில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள் பிரதேச சபையின் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினாலும் அவர்களுக்கு இடையூறாக உறுப்பினர்கள் ஒரு சிலர் செயற்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடக்கின் ஆளுநர் பிரதேச சபைகளின் வரி அறவீடுகளால் வருமானங்களை அதிகரிக்கவும் சட்டவிரோத கட்டுமாணங்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கு வரிக்கு வரி கூறிவருகின்றார்.

ஆனால் இங்கு சந்தைகள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு வருமான ஈட்டல்கள் ஒரு சிலரது நலன்களுக்காக தடுக்கப்பட்டு வருவது போல தற்போது கட்டுமாணங்களின் வரி வருவாயும் சட்டவிரோத செயற்பாட்டால் இல்லாது போகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் வருமான வரி அறவீடே அப்பிரதேச சபையின் அபிவிருத்தி சார் வளர்ச்சியாக இருக்கின்றது.

குறிப்பாக காணி நிலங்கள், வீடுகள், மரங்கள் உள்ளிட்ட இன்னும் பலவற்றை உள்ளடக்கி சோலைவரி செலுத்துவது போன்று, புதிதாக சிமெந்தினால் நிறுத்தப்படும் கற்றூண் வேலி முதல் சுற்றுமதில்கள், வீடுகள், கடைகள், கிணறுகள், கேணிகள்,ஆலயங்கள் மற்றும் பலவுடன், இவற்றுக்கான திருத்தங்கள் வரையான கட்டுமாணங்களை முன்னெடுக்க பிரதேச சபையின் அனுமதி மிகவும் அவசியமாகும்.

அதேநேரம் சபையின் அனுமதி இன்றி கட்டப்பட்டால் அதை அகற்ற பிரதேச சபைக்கு முழுமையான அதிகாரமும் இருக்கின்றது.

இவ்வாறான ஒரு பின்னணியில் வேலணையில் அண்மைக் காலமாக பிரதேச சபையின் அனுமதி இன்றி சட்டவிரோத கட்டுமாணங்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பிரதேச சபைக்கு தாராவது தகவல் கொடுத்தால் தடை உத்தரவு ஒட்டப்படுகின்றது.

அதையும்.கிழித்து எறிந்து விட்டு கட்டடங்களை கட்டும் சிலரும் இருக்கின்றனர். ஒருசிலருக்கே பிரதேச சபை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்றும் பலருக்கு கண்டும் காணாது இருக்கின்றது என்று ஒரு குற்றச்சாட்டும் மக்களிடையே உலவுகின்றது.

குறிப்பாக வீதிகளின் அருகில் அனுமதி இன்றி எல்கையிடல்களையோ கட்டடங்களையோ மக்கள் முன்னெடுக்கும் போது குறிபிட்ட நிலப்பரப்பு வீதி அதிகார சபைக்கோஇ வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கோ, உள்ளூராட்சி மன்றங்களுக்கோ ஒதுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட வேண்டியதாக இருக்கும்.

மறுபுறம் அவ்வாறு ஒதுக்காது கட்டினால் என்றோ ஒரு நாள் அது உடைக்கப்படும் நிலையும் இருக்கின்றது. மக்களும் இவ்விடையத்தில் விழிப்புற வேண்டும்.

ஏனெனில் பிரதேசத்தின் அபிவிருத்தியும் வளர்ச்சியும் மக்களுக்கான ஒன்றென்பதை மக்களும் உணரவேண்டும். இதேநேரம் பிரதேச சபையும் வெறும் அறிக்கைகளால் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தாது செயல்வடிவில் கட்டுப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு கொண்டுசெல்லும் பிரச்சினைகளுக்கு சட்டரீதியாக தீர்வு கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு.

பிரதேசத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் மற்றும் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணித்து அறிக்கையிட ஆளணியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் மக்கள் பிரதிநிதிகள் பொது அமைப்புகள் என பல வடிவில் இருக்கின்றது.

எனவே எச்சரிக்கை "நோட்டீஸ்" ஒட்டுவதோடு நில்லாது சட்ட நடவடிக்கைக்கும் சபை செல்வது அவசியம். இதுவே சபையின் வளர்ச்சிக்கும் உரமூட்டும் என கூறப்பட்டுள்ளது.

ஈரானின் சக்திவாய்ந்த இராணுவத்தளபதியின் மருமகள் அமெரிக்காவில் கைது! நாடு கடத்த நடவடிக்கை

ஈரானின் சக்திவாய்ந்த இராணுவத்தளபதியின் மருமகள் அமெரிக்காவில் கைது! நாடு கடத்த நடவடிக்கை

ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்தவுள்ள பாரிய தாக்குதல்

ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்தவுள்ள பாரிய தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்