சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு - பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன் (படங்கள்)
பொகவந்தலாவ பிரேதசத்தில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வின்போது மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்
சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது சுரங்க குழிக்குள் மண்மேடு சரிந்து விழுந்ததில் பொகவந்தலாவ டின்சின் பகுதியை சேர்ந்த 22வயதுடைய கனகரத்தினம் குபேரன் என்ற இளைஞனே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(12) மாலை இடம் பெற்றதாக பொகவந்தலாவ காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
தடைவியல் காவல்துறை விசாரனை
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட தேயிலை மலை பகுதியில் சட்டவிரோதமாக மூவர் அடங்கிய குழு இரத்தினக்கல் சுரங்க குழியில் மண்னை அகழ்ந்து கொண்டிருந்தே போது திடிரென மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிர் தப்பியதோடு ஒருவர் உயிர்ழந்துள்ளார்.
சம்வம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு ஹட்டன் தடைவியல் காவல்துறையினர் வரவலைக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு ஹட்டன் நீதிமன்ற நீதவான் தலைமையில் மரண விசாரணைகளை இடம் பெற்றுவருகின்றது.
சட்டவதை்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படடுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட தேயிலை மலைபகுதியில் அதிகளவிலான சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
