சட்டவிரோதமாக ஆஸி பயணம் - நாடுகடத்தப்பட்ட இருவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டணை
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து மினுவாங்கொடை நீதவான் டி.தெனபாது இருவருக்கு தலா ரூ. 50,000 தண்டப்பணத்தை அறிவிடுமாறு உத்தவிட்டார்.
பெதுரு துடுவ மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் பல நாள் கப்பலில் அவுஸ்திரேலியா செல்ல முயன்று, சட்டவிரோதமாக வேறொரு இடத்தில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டநிலையில் 2017ஆம் ஆண்டு விசேட விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது
இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இருவரும் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
விதிக்கப்பட்டது அபராதம்
பெப்ரவரி 22 அன்று குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம் விதிக்கப்பட்டனர். இருவரின் பயணத்தடையை நீதிமன்றம் நீக்கியது. குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்த முறைப்பாட்டுக்கு தலைமை தாங்கினர்.
