தையிட்டி விகாரை முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி
புதிய இணைப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தையிட்டி விகாரை முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, சட்டவிரோத மக்களது காணிகளை சுவீகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
குறித்த விகாரை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வரும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
யாழில் (Jaffna) சட்டவிரோத மக்களது காணிகளை சுவீகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
குறித்த விகாரை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வரும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்றையதினமும் (12) இந்த போராட்டமானது நடைபெற்றுவருகின்றது.
போராட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வழமை போல் காவல்துறையினர் போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவித்த வண்ணம் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this