அம்பாறையில் இல்மனைட் அகழ்வு: முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு பேரணி
Ampara
Sri Lanka
Sri Lankan Peoples
By Harrish
அம்பாறை(Ampara) - திருக்கோவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இல்மனைட் அகழ்வினைத் தடைசெய்யக்கோரி எதிர்வரும் திங்கட்கிழமை கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த பேரணியானது எதிர்வரும் திங்கட்கிழமை(24.03.2025) காலை 10 மணியளவில் திருக்கோவில் மணிக்கூட்டு சந்தியில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.
திருக்கோவில் பிரதேசத்திற்கு இல்மனைட் திட்டம் அவசியமில்லை என கோரி குறித்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கவனயீர்ப்பு பேரணி
குறித்த பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பேரணி இடம்பெறவுள்ளது.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நிலவுகின்ற குறித்த பிரச்சினைக்கு தீர்வு கோரி இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்