காதலனுடன் நெருக்கமான காணொளிகளை பத்மேவுக்கு அனுப்பிய நடிகை
பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மேவின் தொலைபேசியில், தென்னிலங்கையின் நடிகையொருவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் காணொளியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடிகை, தனது காதலருடன் நெருக்கமாக இருந்த காணொளியை, பத்மேவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பத்மேவின் தொலைபேசியில் தென்னிலங்கையை சேர்ந்த ஐந்து நடிகைகள் மற்றும் 'மிஸ் சிறிலங்கா' பட்டம் வென்ற ஒரு மொடல் நடிகை தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன.
பத்மேவின் கையடக்கத் தொலைபேசி
அண்மையில், இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

பத்மேவின் கையடக்கத் தொலைபேசிகளும் குற்றப் புலனாய்வு திணைக்களம் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த ஆறு நடிகைகளையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வரவழைத்து அவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய ஐந்து நடிகைகள் மற்றும் 'மிஸ் சிறிலங்கா' மொடல் நடிகையின் புகைப்படங்கள் பத்மேவின் தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த புகைப்படங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் கெஹல்பத்தர பத்மேவுடன் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்னிலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலியிடம் இது தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |