அடுத்த மீளாய்வு தொடர்பில் ஐஎம்எப் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை (Sri lanka) ஜனாதிபதி தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு நடைபெறும், என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பொன்றில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜூலி கோஸாக் (Julie Kozack) இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் அல்லது மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், நாங்கள் வேலைத்திட்டக் கலந்துரையாடல்களை முன்னெடுப்போம்.
இரத்தக் களரியொன்றை ஏற்படுத்த முயற்சிக்கும் தேசிய மக்கள் சக்தி: குற்றச்சாட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்
அடுத்த மீளாய்வு
அதற்கு தாங்கள் தயாராக இருக்கின்றோம். எவ்வாறாயினும், மிக மோசமான நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு வேலைத்திட்டங்களின் நோக்கங்களை அடைவது ஒரு முக்கிய படியாகும்.
இலங்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் நாடு இன்னும் நெருக்கடியிலிருந்து மீளவில்லை.
கடினமாக வென்ற வெற்றிகளைப் பாதுகாப்பது இலங்கைக்கு முக்கியமானது” எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |