சர்வதேச நாணய நிதியத்தின் விசேட குழு இலங்கை வருகை!
சர்வதேச நாணய நிதியத்தின் உண்மையைக் கண்டறியும் குழுவினர் இன்றைய தினம் (22.01.2026) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் (Julie Kozack) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்றைய தினம் நாட்மை வந்தடையும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கி இருப்பார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா சூறாவளி
அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளி காரணமாக, நாட்டின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் மதிப்பிடுவது இந்த குழுவின் நோக்கமாகும்.

அத்துடன், பொருளாதார மீட்பு உத்திகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம் தொடர்பான கொள்கை விவாதங்களில் இந்தக்குழு ஈடுபடும் என ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |