இரண்டாவது கடன் தவணைக்கு அனுமதி வழங்கிய ஐஎம்எப்
இலங்கைக்கு இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு நேற்று(12) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் செயல்பாடுகளில் திருப்தி
நிர்வாக சபையின் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஐ, EFF-ஆதரவு திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அதன் அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவிற்கு குறைந்து ஏழு தசாப்தங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியில் இலங்கை மூழ்கியது.
ஆனால் மார்ச் 2023 இல் IMF பிணை எடுப்பு 2.9 பில்லியன் டாலர்களை முடக்கியதில் இருந்து, நாணய இருப்புக்களை மீண்டும் உருவாக்க முடிந்தது.
நிதி வழங்க அனுமதி
இதற்கமைய, முதல் மதிப்பாய்வின் நிறைவிற்கு அமைய SDR 254 மில்லியன் (சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதி வசதியை உடனடியாக இலங்கைக்கு வழங்க அனுமதி அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இதுவரையில் இலங்கைக்கு SDR 508 மில்லியன்கள் மொத்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |